துருவ் படத்திற்கு மருத்துவர்கள் எதிர்ப்பு.. மது குடித்துவிட்டு சிகிச்சை அளிப்பதா?

Nov 25, 2019, 13:36 PM IST

துருவ் விக்ரம், பனிதா சந்த் நடித்துள்ள ஆதிய வர்மா வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. கிரிசியா இயக்கி உள்ளார். காதல் கதையாக இருந்தாலும் படத்தில் வன்முறை. முத்தக்காட்சிகள். மது குடிப்பது, புகை பிடிக்கும் காட்சிகள் அதிகம் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.

ஹீரோ துருவ் கைராசிக்கார மருத்துவர் என்று காட்டப்பட்டாலும் ஒரு காட்சியில் மது குடித்துவிட்டு அறுவை சிகிச்சை செய்வது போல்காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு டாக்டர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

இதுபற்றி சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறும்போது,”கருத்துச் சுதந்திரம் உண்டு என்று சொல்லப்படும் அதே நேரத்தில் படைப்பாளிகள் பொறுப்புணர் வுடனும் நடந்துகொள்ள வேண்டும். டாக்டர் ஒருவர் மது குடித்துவிட்டு சிகிச்சை அளிப்பது போல் காட்சி அமைத்திருப்பது மருத்துவர்கள் மீது தவறான எண்ணம் ஏற்படுத்தும். அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்


Leave a reply