ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒரு கோடி கேட்கும் ஹீரோயின்..

by Chandru, Nov 25, 2019, 13:46 PM IST
Share Tweet Whatsapp
பிரபல நடிகைகள் ஒரு பாடலுக்கு ஆடுவது அவ்வப்போது நடக்கிறது. நயன்தாரா  முதல் ஸ்ருதிஹாசன், தமன்னா வரை அதுபோல் ஆடியிருக்கின்றனர். ஆனால் அதற்காக நடிகைகள் கேட்கும் சம்பளம் வாயை பிளக்க வைக்கிறது. சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலிடம் ஒரு பாடலுக்கு நடனம் ஆட கேட்டபோது அவர் கேட்ட தொகை தலையை சுற்ற வைத்துவிட்டதாம்.
தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோ அல்லு அர்ஜுன். அவரது படத்தில் ஒரு பாடலுக்கு ஆட காஜலை அணுகினர். அவர்களிடம் நிச்சயம்  ஆடுகிறேன்  ஆனால் ஒரு கோடி சம்பளம் தரவேண்டும் என்று கேட்டாராம். அதைக்கேட்டு தயாரிப்பாளர் சற்று அதிர்ச்சி ஆனார். ஆனால் காஜல் ஒரு பாடலுக்கு ஆடினால் அது பிஸ்னஸுக்கு உதவும் என்று இயக்குனர் கூறுவதால் தயாரிப்பாளரும் அதுபற்றி யோசித்து வருகிறராம்.
 
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் காஜல் நடித்திருப்பதால் அப்படித்தான் அதிகமாக சம்பளம் கேட்பார் என்று சிலர் சொல்கின்றனர்.

Leave a reply