தலைவர் ரஜினியின் 69வது பிறந்த நாள் வரும் டிசம்பர் 12ம் தேதி ஆகும் . அன்று அவரிடமிருந்த புதிய அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால் அன்றைய தினம் அவர் சென்னையில் இருப்பாரா? வெளியூரில் இருப்பாரா என்பதுபற்றி தெரியவில்லை. ஆனாலும் பிறந்த நாளன்று தர்பார் படத்தின் பாடல் மற்றும் டீஸர்வரவிருக்கிறதாம்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம் பொங்கலன்று திரைக்கு வர உள்ளதால் முன்னதாக பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு தியேட்டர்களில் ரஜினியின் படம் திரையிட வேண்டும் ரசிகர்கள் வற்புறுத்தி வந்தனர். இதையடுத்து ரஜினியின் 3 படங்கள் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆட்டோகாரனாகவும், மும்மை தாதாவாகவும் ரஜினி நடித்த பாட்ஷா, மற்றும் அவர் நடித்த 2.0, காலா ஆகிய படங்களை மீண்டும் வெளியிட உள்ளனர். இவற்றில் 2.0 மற்றும் காலா ஆகிய படங்கள் மலேசியாவில் வெளியாக உள்ளது.
ரஜினியின் 69வது பிறந்த நாள் என்பதால் மலேசியாவில் அன்றைய தினம் 2.0 மற்றும் காலா படங்களை பார்க்க முதலில் வரும் 69 பேருக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட உள்ளது. இது ரஜினி ரசிகர் களுக்கு டிரிபிள் ட்ரீட் ஆக அமைந்திருக்கிறது.