நித்தியானந்தாவிடம் நெருக்கமா? நெட்டில் டென்ஷன் ஆன பாடகி

by Chandru, Nov 26, 2019, 14:56 PM IST

கோலிவுட்டில் நல்ல பல பாடல்களை பாடியிருப்பவர் சின்மய். அத்துடன் சில் நடிகைகளுக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார். இவர் கவிஞர் வைரமுத்துபற்றி ஏற்கனவே மீ டூ குற்றச்சாட்டு கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர்.

அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிடும் சின்மய்க்கும், அவருக்கு எதிரானவர்களுக்கும் நெட்டில் சண்டை நடக்கிறது. இந்நிலையில், சாமியார் நித்யானந்தாவிடம் சின்மய் ஆசி பெறுவதுபோல் புகைப்படம் நெட்டில் வெளியானது.

நித்தியானந்தா சாமியாருடன் பாடகி சின்மய் இருப்பதுபோல் சில புகைப்படங்கள் வலைதளங்களில் பரவியது. ஆனால் அந்த படங்கள் போலியானவை என சின்மய் மறுத்திருக்கிறார். ஆனாலும் சிலர் மீண்டும் மீண்டும் சின்மயியை சீண்டிய வண்ணமிருக்கின்றனர்.

அதைக்கண்டு டென்ஷன் ஆன சின்மய், 'புகைப்படங்கள் பொய்யானவை என்று நான் விளக்கிய பிறகும் மீண்டும் அதையே செய்வது ஏன் என்று தெரியவில்லை. அப்படிச் செய்பவர்கள் அதனை தெரியாமல் செய்கிறார்களா அல்லது யாரிடமோ பணம் வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே செய்கிறார்களா ?' என சூடாக கேட்டிருக்கிறார்.


Leave a reply