பர்த்டே பார்ட்டியில் ஜெனிலியா நடனம்.. மகளுடன் பங்கேற்ற ஐஸ்வர்யாராய்...

by Chandru, Nov 26, 2019, 18:03 PM IST
Share Tweet Whatsapp

ஜெயம் ரவி ஜோடியாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் நடித்த ஜெனிலியா தனது அப்பாவித்தனமான நடிப்பால் ரசிகர் களை கவர்ந்தார்.

தொடர்ந்து சச்சின், உத்தம புத்திரன்  போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். திடீரென்று கடந்த 2012ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலர் ரிதேஷ் தேஷ்முகை மணந்தார். ஒரு கட்டத்தில் நடிப்பிலிருந்து விலகினார். ஜெனிலியா தற்போது இரண்டு குழந்தைக்கு தாய் ஆக இருக்கிறார். முதல் மகன் ரேயனுக்கு நேற்று பிறந்த நாள்.

இதையொட்டி ஜெனிலியா வெளியிட்ட மெசேஜில்,'எனது மூத்த மகன் ரெயான் பிறந்த நாள், எனக்கு அவன் தாயாக புரமோஷன் கொடுத்த நாள் இது. ரேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக நடந்த பர்த்டே பார்ட்டியில் ஜெனிலியா, தனது கணவருடன் நடனம் ஆடினார். அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய் தனது மகள் ஆராதயாவுடன் பங்கேற்றார். மேலும் விவேக் ஓபராய், இஷா தியோள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


Leave a reply