படமாகும் மைக்கேல் ஜாக்ஸன் வாழ்க்கை.. மர்மங்கள் விலகுமா?

Michael Jackson Biopic Is Coming

by Chandru, Nov 26, 2019, 18:17 PM IST

மேற்கத்திய நடனத்தின் சின்னமாக மாறி விட்டவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்டவரின் மரணம் ஒரு நாளில் தடாலடியாக நடந்து முடிந்தது. இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 50 வயதில் அவர் மாரடைப்பில் திடீர் மரணம் அடைந்தார். ஆனால் அவரது மரணத்தில் மர்மங்களும், சந்தேகமும் இருப்பதாக பின்னர் கூறப்பட்டது. அந்த கேள்விகள் இன்னமும் கேள்விகளாகவே உள்ளது.

இந்நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது. மைகேலின் மரணத்திலிருக்கும் மர்மமெல்லாம் இப்படத்தின் மூலம் வெளியாகுமா என்பது தெரியவில்லை.

மைக்கேல் ஜாக்ஸன் வாழ்க்கை மையமாக வைத்து ஏற்கனவே தி ஜாக்சன்ஸ்: ஒரு அமெரிக்கன் கனவு மற்றும் ஃப்ளெக்ஸ் அலெக்சாண்டர் மேன் இன் தி மிரர்: தி மைக்கேல் ஜாக்சன் ஸ்டோரி ஆகிய தொடர்கள் வந்துள்ளன. தற்போது அவரது வாழ்க்கையை படமாக்க அதிகாரபூர்வமாக மைகேல் ஜாக்ஸன் தொடர்பான அமைப்பிலி ருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இப்படத்தில் மைக்கேல் ஜாக்ஸனாக நடிக்க தகுதியான நபரை தேடி வருகின்றனர்.

You'r reading படமாகும் மைக்கேல் ஜாக்ஸன் வாழ்க்கை.. மர்மங்கள் விலகுமா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை