சமீபகாலமாகவே நடிகை கங்கனா ரனாவத் தடாலடி முடிவுகள் எடுத்து வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வேடத்தை ஏற்று தலைவி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக ஜான்சிராணி வேடம் ஏற்று மணிகர்ணிகா இந்தி படத்தில் நடித்தார். இப்படத்தை முதலில் கிரிஷ் இயக்கினார்.
அவருடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதை யடுத்து தானே படத்தை இயக்கி நடித்தார் கங்கனா. தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தை படமாக்குகிறார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதுதொடர்பாக 20 வருடத் துக்கும் மேலாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்த வழக்கில் சமீபத்தில் இறுதி தீர்ப்பு வந்தது. அயோத்தி வழக்கை மையமாக வைத்து சொந்தமாக படம் தயாரித்து நடிக்க முடிவு செய்திருக்கிறார் கங்கனா ரனாவத். இதற்காக சொந்த பட நிறுவனம் தொடங்கி உள்ளார். இப்படத்துக்கு அபராஜிதா அயோத்யா என டைட்டில் வைக்கப்பட்டிருக் கிறது.
பாகுபலி, மணிகர்ணிகா, ஜெயலலிதா வாழ்க்கை படங்களுக்கு திரைக்கதை எழுதிய விஜயயேந்திர பிரசாத் அயோத்தி வழக்கு படத்துக்கும் திரைக்கதை அமைக்கிறார். பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமவுலினியின் தந்தைதான் விஜயேந்திர பிரசாத்.