நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி. கமிஷனர் ஆபிஸில் புகார்..

by Chandru, Nov 28, 2019, 18:05 PM IST
முனி, காஞ்சனா என்ற வரிசையாக ஹிட் படங்களை அளித்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் மாற்றுதிறனாளிகளை வைத்து பராமரித்து வருகிறார்.
மேலும் மக்கள் சேவை மையம் சார்பில் நற்பணிகள் செய்து வருகிறார். இந்நிலையில் லாரன்ஸ் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுவதாக மக்கள் சேவை மைய பொதுச் செயலாளர், சென்னை போலீஸ் கமிஷனர் ஆபிஸி் புகார் அளித்தள்ளார்.
ராகவா லாரன்ஸ் பெயரில் சிலர் போலி இணைய தள பக்கம் உருவாக்கி அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கருத்துகளை வெளியிடுகி றார்கள். லாரன்ஸ் பெயரை சொல்லி வீடு கட்டித் தருவதாக பண மோசடியிலும் ஈடுபடுகிறார்கள்.
பெங்களூரு, சேலம், ஊட்டி, ராமநாதபுரம் பகுதிகளில் அதிக அளவில் பணம் வசூல் செய்து வருகிறார்கள். பணமோசடி மூலம் லாரன்ஸ் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார்களை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருக்கிறது.


More Cinema News

அதிகம் படித்தவை