ரஜினி பாடலுக்கு 6 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வை.. 24 மணி நேரத்தில் புதிய சாதனை...

by Chandru, Nov 28, 2019, 19:38 PM IST
ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'தர்பார்' படத்திலிருந்து சும்மா கிழி என்ற பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. ரஜினியின் அறிமுகமாக பாடலாக படத்தில் இடம் பெறும் இந்த பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். யூ டியூபில் பாடல் வெளியான 6 மணி நேரத்தில் 4 மில்லியன் பேர் அதாவது 40 லட்சம்பேர் பார்த்துள்ளனர்.
இதுவொரு சாதனை என்று கூறும் பட வட்டாரம், 24 மணிநேரத்தில் பாடல் புதிய சாதனையை படைக்கும் என்கிறது.


More Cinema News