பேய்க்கு பயந்த இயக்குனரின் பேய்படம்.. ஐந்து வேளை தொழுது படமாக்கினார்.

by Chandru, Nov 30, 2019, 10:23 AM IST
முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா, நேப்பாளி போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. இவருக்கு பேய் என்றாலே பயம். அதனால் பேய் படம் கூட பார்க்க மாட்டார்.
இந்நிலையில் அவருக்கு பேய் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. சுந்தர் சி. கதாநாயகனாக
நடிக்கும் இருட்டு என்ற படம்தான் அது.
ஸ்கிரிப்ட், ஆர்ட்டிஸ்ட், தயாரிப்பாளர் என எல்லாம் முடிவான பிறகு துரையை அழைத்த சுந்தர்.சி, இந்த பேய் படத்தை இயக்குங்கள் என்றார். அதைக்கேட்டு மிரண்டுபோன துரை, பேய் என்றால் பயம்... அதனால் பேய் படம்கூட பார்த்த தில்லை என்று நழுவப்பார்த்தார். பிறகு ஹாலிவுட் இயக்குனர் ஒருவரின் பெயரைச் சொல்லி, அவருக்கு கூட பேய் என்றால் பயம் ஆனால் அவர்தான் பயங் கரமான பேய் படங்களை இயக்கியிருக் கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு நீதான் பொருத்தமான ஆள் என்று துரையிடம் தைரியம் கூறினார் சுந்தர்.சி.
பின்னர் நிறைய பேப் பட சிடிக்களை கொடுத்து. முதலில் இதைப்பாருங்கள். தொடர்ந்து பார்த்தால் பேய் பயமும் போய்விடும், பேய் படம் எப்படி எடுக்க வேண்டும் என்ற டெக்னிக்கும் தெரியும் என்றார். அதையெல்லாம் வாங்கிப்பார்த்த பிறகே இருட்டு படத்தை இயக்கி முடித்தாராம் வி.இசட்.துரை.
இந்த கதை பேயும் இல்லை பிசாசும் இல்லை. இரண்டுக்கும் நடுவிலான ஜின் என்ற ஒரு உண்மையான பிறப்பை மைய மாக வைத்து எடுக்கப்பட்டது. இதுபற்றி இஸ்லாத்தில் கூறப்பட்டுள்ளது. கூகுளில் தேடினாலும் இதுபற்றிய விவரங்கள் கிடைக்கும். முதன்முறையாக இந்திய சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவில் இதுவொரு புதுமுயற்சியாக இருக்கும் என்றார் இயக்குனர் வி. இசட். துரை.
இப்படத்தில் விமலா ராமன், சாக்‌ஷி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் 6ம் தேதி திரைக்கு வருகிறது என்றார்.
இருட்டு படம் இயக்கியபோதெல்லாம் துரை ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவாராம்.


More Cinema News

அதிகம் படித்தவை