பொள்ளாச்சி விவகார பேச்சு:பாக்யராஜ் விளக்கம்.. நான் பெண்களை மதிப்பவன் அல்ல..

TN State Commission for Women summons director k.Bagyaraj

by Chandru, Nov 30, 2019, 18:11 PM IST
சென்னையில் நடந்த திரைப்பட பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ், 'பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு ஆண்களை மட்டும் குற்றம் சொல்லக்கூடாது.
பெண்களும் ஒரு வகையில் காரணம்' என குறிப்பிட்டிருந்தார். அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாக்யராஜிக்கு எதிராக ஆந்திர மாநில மகளிர் ஆணையம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டது. மேலும் தமிழ் மாநில மகளிர் ஆணையம் சார்பில் பாக்யராஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பெண்கள் குறித்து தான் பேசியதுபற்றி பாக்யராஜ் விளக்கம் அளித்தள்ளார்.
'என்னை விட்டுவிடுங்கள் அண்ணா' என்று பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் கதறுவதை வீடியோவில் பார்த்து நான் பதறிப்போனேன். ஒரு தந்தை அந்தஸ்த்திலிருக்கும் எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. இது எப்படி நடந்தது. பெண்கள் இதற்கு இப்படி இடம் கொடுத்தார்கள், எச்சரிக்கையுடன் இருந்திருக்கலாமே என்ற கவலை ஏற்பட்டது. அந்த எண்ணத்தைத்தான் நான் வெளியிட்டேனே தவிர மற்றபடி பெண்களுக்கு நான் என்றைக்குமே மதிப்பு கொடுப்பவன்.
மவுன கீதங்கள், தூறல் நின்னுபோச்சு, முந்தானை முடிச்சு, தாவணிக்கனவுகள் நான் இயக்கிய படங்களில் பெண்களைத்தான் போற்றியம் பாராட்டியும் புகழ்ந்தும் படம் இயற்றி உள்ளேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரைப்போல் தாய்குலங் களையும் மதித்து வருகிறேன்' என்றார்.

You'r reading பொள்ளாச்சி விவகார பேச்சு:பாக்யராஜ் விளக்கம்.. நான் பெண்களை மதிப்பவன் அல்ல.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை