பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தயாரிப்பாளர்கள் படத்தில் நடிக்கும் குறிப்பிட்ட ஹீரோக்களுக்கு பல கோடி சம்பளமாக தரவேண்டிய சூழல் உள்ளது. இதுவும் பைனான்ஸ் பிரச்னைக்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. ஆனால் சில நடிகர்கள் தங்கள் சம்பளத்தை விட்டுகொடுத்து படம் ரிலீஸ் ஆவதற்கு உதவி புரிகின்றனர். அந்த நடிகர்கள் வரிசையில் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கி றார்.
கிராமத்து பின்னணியிலான கதை, நடுத்தர குடும்பத்து கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் முதன்முறையாக சயின்ஸ் பிக்ஸன் கதை ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார் சத்தமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் முடிந்திருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பொருளாதார பிரச்னையால் நிறுத்தப்பட்டிருக்கிறது.
ஆனால் அப்படம் தனக்கு மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, தமிழ் திரையுலகுக்கு முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
'பைனான்ஸ் பிரச்னையால் படப்பிடிப்பு நிற்கக்கூடாது ரவிகுமார் இயக்கும் சயின்ஸ் பிக்ஸன் படத்தில் நடிக்க எனக்கு சம்பளமே வேண்டாம். அதை விட்டுத்தர தயாராக இருக்கிறேன்' என தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது இந்த வார்த்தை பட குழுவினருக்கு புதுதெம்பை தந்திருக்கிறது. வரும் ஜனவரி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.