ஆக்ஷன், அதிரடி, கமர்ஷியல் மசாலா, திகில், பேய் படங்கள் என கோலிவுட் ஒரு வட்டத்துக்குள் நிற்காமல் பல டிரெண்டில் சுழன்றுக்கொண்டிருக்கிறது. மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்று கமர்ஷியல் அம்சத்துடன் தற்போது வெளிவந் திருக்கும் படத்தில் கூட பேய் கதையை திணிக்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவு டென்ஷன் எதற்கு எல்லாவற்றுக்கும் மாற்றாக ஒரு பக்தி படத்தை இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. அவர் இயக்கும் படத்துக்கு மூக்குத்தி அம்மன் என பெயரிடப்பட்டிருக்கிறது.
கன்னியாகுமரியில் உள்ள அம்மனுக்கு மூக்குத்தி அம்மன் என்றுபெயர் அங்கு நடந்த சம்பவங்களை மையமாக வைத்து முழுக்க முழுக்க பக்தி படமாக இதை உருவாக்க முடிவு செய்திருக்கிறார் பாலாஜி. இதில் மூக்குத்தி அம்மன் வேடம் ஏற்கிறார். நயன்தாரா.
இப்படத்தின் தொடக்க விழா பூஜை கன்னியா குமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடந்தது. இதையடுத்து நாகர்கோவிலில் படப் பிடிப்பு துவங்கியது.
இப்படத்தின் படப்பிடிப்பில் விரைவில் நயன்தாரா இணைந்து நடிக்கவிருக்கிறார். படப்பிடிப்பில் பங்கேற்கும் நாளிலிருந்து நயன்தாரா விரதம் மேற்கொண்டு நடிக்க உள்ளார். முன்னதாக வேறு சில காட்சிகள் அங்கு படமாகின்றன.
கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். யாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சி அமைக்கிறார் எல்.கே.ஜி.', ஜெயம் ரவி நடித்த 'கோமாளி', வரும் நடித்த 'பப்பி' படங்களை தொடர்ந்து ஐசரி கே.கணேஷின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரிக்கிறது.
'மூக்குத்தி அம்மன்' படத்தின் கதை, திரைக்கதை. வசனங்களை எழுதியிருப்பதுடன் என்.ஜே.சரவணனுடன் இணைந்து படத்தையும் இயக்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி.