கன மழை பற்றி காமெடி நடிகர் காமெடி டிவிட்.. மழையே நின்னுபோச்சு..

by Chandru, Dec 2, 2019, 17:59 PM IST
Share Tweet Whatsapp
விஜய், அஜீத் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நண்பராகவும் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ்.
அடிக்கடி தனது டிவிட்டர் பாக்கத்தில் காமெடியாக மெசெஜ் போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து சில பகுதிகளுக்கு அரசு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட்  எச்சரிக்கை விடுத்தது.இது சதிஷ் கண்ணில்பட்டது.
 
உடனே அவர் இதுகுறித்து காமெடியாக மெசெஜ் வெளியிட்டுள்ளார். 'ரெட் அலர்ட் எச்சரிக்கைன்னு மழை அறிவிப்பை மக்களுக்கு  தரீங்களா...  இல்ல வராத மழைக்கு குடுக்கறீங்களா... சொன்ன உடனே நின்னு போச்சு' என பதிவிட்டிருகிறார்.

Leave a reply