விஜய் அத்தை மகளுடன் நடிகர் அதர்வா தம்பி நிச்சயதார்த்தம்.. ஸ்பெயினில் திருமணம்..

by Chandru, Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா.
இவர் கடந்த 2012ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகம் படத்தை இயக்கியிருந்தார். சினேகாவின் தந்தை பிரபல தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. ஏற்கனவே விஜய் நடித்த பல படங்களை தயாரித்திருக்கும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 64' படத்தை தயாரித்து வருகிறார்.
ஆகாஷ், சினேகா கடந்த 2 வருடமாக காதலித்து வந்தனர். அவர்கள் காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று ஆகாஷ், சினேகா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணம் ஸ்பெயின் நாட்டில் நடக்கவிருப்பதாக தெரிகிறது.

Get your business listed on our directory >> - https://directory.thesubeditor.comMore Cinema News

அதிகம் படித்தவை