சமூகவலை தளங்களில் ஆக்டிவாக இருந்த குஷ்பு தனது இணைய தள டிவிட்டர் பக்கத்திலிருந்து சமீபத்தில் விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் விலகியிருக்கிறார். அவர் வேறு யாருமல்ல வெண்ணிலா கபடி குழு பட இயக்குனர் சுசீந்திரன்.
எதையும் நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமுடைய சுசீந்திரன் தனது கருத்துக்களையும் கைப்பட எழுதி அதை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார், திடீரென்று அவர் டிவிட்டரிலிருந்து விலகி உள்ளார். வேலைபளு காரணமாக அவர் விலகியிருப்பதாக தெரிவித் துள்ளார்.
டிவிட்டர் மட்டுமல்லாமல் இன்ஸ்டா கிராம். பேஸ்புக் போன்றவற்றிலுமிரிந்து அவர் விலகியிருக்கிறார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சாம்பியன் படம் நாளை திரைக்கு வருகிறது.