சிம்பு தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு புதுஉத்தரவு.. 1 கோடி நஷ்ட ஈடு விசாரணை..

by Chandru, Dec 12, 2019, 09:24 AM IST
சிம்பு ஹீரோவாக நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் என்ற படத்தை மைக் கேல் ராயப்பன் தயாரித்தார். இதில் நடிக்க சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.1.51 கோடி அடவான்ஸ் தரப்பட்டது. சம்பள பாக்கியை பெற்றுத்தரும்படி, நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்தார்.
இதற்கிடையில் இப்படத்தல் பெரிய நஷ்டம் ஏற்பட்டது அந்த பண இழப்பை சிம்புவிடமிருந்து பெற்றுத் தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் செய்தார்.
இதையடுத்து தனது புகழை கெடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு அவதூறு பேட்டி கொடுத்ததாகவும், அதற்கு நஷ்ட ஈடாக அவரிடம் ராயப்பனிடமிருந்து ரூ.1 கோடி மானநஷ்டஈடு வழ்ங்க உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சிம்பு வழ்க்கு தொடர்ந்தார்.
அதில் அப்போது நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்த விஷாலையும். தயாரிபாளர்ர் சங்கத்தையும் வழக்கில் சேர்த்திருந்தார் சிம்பு. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இதுதொடர்பாக விஷால் தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவில், தற்போது நடிகர் சங்கத்தை நிர்வகிக்க தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளதாகவும், நடிகர் நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக விஷால் இல்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து நீதிப்தி தனது உத்தரவில், வழக்கில் சங்கத்தின் சிறப்பு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யும்படி சிம்புவுக்கு உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை வரும் ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.


More Cinema News