ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்.. பிறந்தநாளில் கமல் வாழ்த்து..

Kamal wishes Rajini 70th Birthday

by Chandru, Dec 12, 2019, 14:31 PM IST

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தை முடித்திருக்கும் ரஜினிகாந்த் அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு , பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர்.

இதன் தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 69 வயது முடிந்து 70 வயது தொடங்கியது. அவரது 70வது பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி னார்கள். பல்வேறு நற்பணிகள் வழங்கியும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். கொண்டாடி வருகின்றனர்.

ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில்.'அன்பர் நண்பர் ரஜினிகாந்த்துக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்' என குறிப்பிட்டிருக்கிறார்.

You'r reading ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்.. பிறந்தநாளில் கமல் வாழ்த்து.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை