படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..

by Chandru, Dec 14, 2019, 22:53 PM IST
Share Tweet Whatsapp

விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் படத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி. தற்போது தனுஷ் ஜோடியாக சுருளி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். மலையாளத்திலும் சில படங்களில் ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தேர்வானார். சரித்திர பின்னணியிலான இப்படத்திற்காக ஐஸ்வர்யா படகு ஓட்டு வதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். இதற்காக கேரளாவில் ஆற்றுப் பகுதிகளில் பயிற்சியா ளர்கள் உதவியுடன் படகு ஓட்டி வருகிறார்.

லைகா புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, லால், திரிஷா, ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ் மான் இசை அமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.


Leave a reply