திருமணத்துக்கு பிறகு டேட்டிங் சென்ற நட்சத்திர ஜோடி.. கடற்கரையில் சைக்கிளில் சுற்றி உல்லாசம்

by Chandru, Dec 17, 2019, 17:59 PM IST

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா காதலித்த திருமணம் செய்துகொண்டனர். இது நீண்ட காதல் கிடையாது. கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்தபோது இருவரும் தங்கள் விருப்பத்தை தெரிவித்தனர். சில மாதங்களில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு ஆர்யாவைப்போலவே சாயிஷாவும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். டெடி என்ற படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இருவரும் திடீரென்று மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரை இல்லத்தில் தங்கினார்கள். அருகில் இருந்த நீலகடலை பார்த்ததும் இருவருக்கும் நீச்சல் மூட் வந்தது. பாதுகாப்பு கவசங்கள் அணிந்துகொண்டு கடலுக்கு அடியில் நீந்திசென்றனர். மணிக்கணக்கில் அன்டர்வாட்டர் நீச்சல் முடிந்தபிறகு வெளியில் வந்தவர்கள் பிறகு சைக்கிள் எடுத்துக்கொண்டு டேட்டிங் சென்றனர்.

கணவர் ஆர்யாவுடன் நடத்திய டேட்டிங் பற்றி சாயிஷா கூறும்போது,' ஆர்யா நீ மிகவும் அசாத்தியமான மனிதன். அது எனக்கு நன்கு தெரியும். எது கிடைத்தாலும் அது உனக்கு சிறந்ததாகவே கிடைக்கட்டும் வேண்டும் என்று ஒவ்வொருமுறையும் ஆண்டவனை வேண்டுகிறேன். உன்னுடன் இணைந்து கடலுக்கு அடியில் அன்டர்வாட்டர் நீச்சலடிப்பது இது முதல் அனுபவம். என்னால் இதை வாழ்நாளில் மறக்க முடியாது' என்றார்.


More Cinema News