காதலித்து திருமணம் செய்துகொண்ட டைரக்டர் பிரிய தர்ஷன், நடிகை லிசி சில வருடங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களது மகள் கல்யாணி. திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார். பெற்றோர் விவகாரத்து பெற்று பிரிந்தது பற்றி கல்யாணி முதன்முறையாக பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:
விவகாரத்து ஒருவரை பாதிக்காது என்பதல்ல. ஆனால் என்னை ஒருபோதும் பெற்றோர் கடுமையான சூழலில் தள்ளியதில்லை. என்னதான் அவர்களுக்குள் உணர்வுப்பூர்வமான போராட்டம் இருந்தாலும் அது என்றைக்கும் எங்கள் வீட்டை கடந்து சென்றதில்லை. உண்மையிலேயே அவர்கள் விவாகரத்து பெற்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் இன்றைக்கு நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். நாங்கள் அமைதியாக வாழ்கிறோம். எனது பெற்றோருடன் எனக்கு உறவு திருப்திகரமாக இருக்கிறது. அதுதான் மிக முக்கியம் அல்லவா?