சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்கிறார் ராசி கண்ணா.. ரசிகர்களை ஈர்க்க புதுடெக்னிக்..

by Chandru, Dec 20, 2019, 15:57 PM IST

டிஜிட்டல் தளங்களில் புதிய படங்கள் ஒரு மாத இடைவெளியில் ரிலீஸ் ஆகிறது. மேலும் புதிய படங்கள் வெளியான அன்றைய தினமே, திருட்டு விசிடிக்கள் நெட்டில் வெளியாகிறது.

மேலும் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்களை பார்க்க தியேட்டர்களில் கூட்டம் வருவதில்லை. இதனால் படங்கள் ஒருவாரம் கூட வசூல் ஆகாத நிலை உள்ளது. இதையடுத்து தங்கள் படங்களை நடிகர், நடிகைகள் புரமோட் செய்து ரசிகர்களிடம் கொண்டு சென்று அவர்களை தியேட்டருக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

நடிகர் சாய் தேஜா, ராஷி கண்ணா நடித்த, 'பிரதி ரோஜு பண்டகே' தெலுங்கு படம் இன்று வெளியானது. அப்படத்திற்கு முதல்நாளில் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்ப்பதற்காக படத்தில் நடித்த ராசி கண்ணா தியேட்டர் கவுன்ட்டரில் அமர்ந்து டிக்கெட் விற்பனை செய்தார். இந்த தகவல் பரவியதும் ரசிகர்கள் திரண்டு வந்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தனர்.

You'r reading சினிமா தியேட்டரில் டிக்கெட் விற்கிறார் ராசி கண்ணா.. ரசிகர்களை ஈர்க்க புதுடெக்னிக்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை