விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெர்மன் அழகி.. மேகா ஆகாஷும் கைகோர்க்கிறார்..

by Chandru, Dec 20, 2019, 16:09 PM IST

பேராண்மை, புறம்போக்கு ஆகிய படங்களில் எஸ்.பி.ஜனநாதனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்கும் முதல்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இதில் கதாநாயகனாக விஜய்சேது பதி நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்ட பட நாயகி மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் இசக்கி துரை தயாரிக்கிறார். விஜய்சேதுபதி பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

இப்படத்தில் இசை கலைஞராக நடிக்கும் விஜய்சேதுபதி சில நாட்கள் கீபோர்ட் வாசிப்பதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார் மேகா ஆகாஷும் இசை கலைஞராக நடிக்கிறார். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஜெர்மன் நாட்டு இளம்பெண் ஒருவரும் நடிக்கிறார்.

இயக்குனர்கள் ஜெயம் மோகன்ராஜா, மகிழ்திருமேனி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் விவேக், கனிகா, ரகு ஆதித்யா, ரித்விகா, சிவரஞ்சனி நடிக்கிறார்கள். வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு ஊட்டி, பழனி, கொடைக் கானலில் நடந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு திருவாரூரில் நடக்கிறது. காதல், கிறிஸ்துமஸ். புத்தாண்டு இசை என பொழுதுபோக்குடன் கூடிய கதையான இதில் சர்வதேச பிரச்னை ஒன்றும் அலசப்படுகிறது.

You'r reading விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் ஜெர்மன் அழகி.. மேகா ஆகாஷும் கைகோர்க்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை