"தம்பி" படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கின்றனர், ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடித்திருக்கிறார். நாயகியாக நிகிலா விமல் நடித்திருக்கிறார். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். 4 பேரின் நேருக்குநேர் கலந்துரையால் நடந்தது. அந்த ருசிகர விவாதம் இதோ..
தம்பி படத்தோட கதை பாலிவுட் ரைட்டர் ரென்ஷில் டி சில்வா, சமீர் அரோரா எழுதியது. அதை கொஞ்சம் மாத்தி வேலை பார்த்திருக்கேன். இது ஒரு ஃபேமிலி படம், திரில்லர். ரெண்டு ஃபேமிலிக்குள்ள நடக்கிற சம்பவங்கள். என்றார் இயக்குனர் ஜீத்து
கார்த்தி கூறும்போது,' கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டுவிதலுக். ஆனால் ஒரே கேரக்டர் தான் என்றார்.
கார்த்தி கூறும்போது,' கதை கோவாவுல ஆரம்பிச்சு பயணிக்குது.அதனால ரெண்டுவிதலுக். ஆனால் ஒரே கேரக்டர் தான் என்றார்.
ஒரு கேரக்டர்தான் என்றாலும் ரெண்டு விதமா பண்ணிருக்கார். நல்லாவே நடிச்சிருக்கார் என்றார் இயக்குனர்.
திடீரென்று குறுக்கிட்ட ஜோதிகா,' தம்பி படத்தில் கார்த்தி கூட நடிக்கிறது கஷ்டமா இல்ல. ஆனா சூர்யா கூட நடிக்கிறது கஷ்டம்.. நிறைய சண்டை வரும் உங்க வீட்ல எப்படி சண்டை வருமோ.. அப்படித்தான் புருஷன் பொண்டாட்டி சண்டை' என்றார்.
ஆமாம் அண்ணியோட நடிக்கறது கஷ்டமா தோணல. நாங்க எப்பவும் எப்படி இருப்போமோ அப்படிதான் இருந்தது. நான் என்ன ரசிச்சேன்னா படத்துல எங்க ரெண்டு பேருக்கும் ஒத்து வராது. சண்டை போட்டுகிட்டே இருப்போம் அவங்க முறைப்பாங்க நான் ஒதுங்கி போவேன் அத ரசிச்சேன். ஆனா வீட்ல அப்படி இல்ல நாங்க ரெண்டு பேரும் நிறைய பேசிப்போம் இடைமறித்த ஜோதிகா, 'இல்ல வீட்ல நாங்க சண்டைலாம் போட்டுக்க மாட்டோம்' என்றார்.

சும்மாவே முகத்தை வெறித்து பார்த்து உட்கார்ந்துக்கொண்டிருந்த நிகிலா விமல் ஒரு பிட்டைபோட்டார். 'டைரக்டர் எப்பவும் பர்ஃபெக்ட் 99 க்கும் போக விட மாட்டார் 101க்கும் போக விட மாட்டார். சரியா 100 ல அவருக்கு தேவையானத வாங்கிடுவார்' என்றார்.
இப்படி உரையால் நீண்டது.
இப்படி உரையால் நீண்டது.