கமல், விஜய், அஜீத்துடன் நடித்த திரிஷாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்துவந்தது. அந்த ஏக்கம் 'பேட்ட' படம் மூலம் தீர்ந்தது. அதேபோல் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் தற்போது நிறைவேறியிருக்கிறது.
மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் மீண்டும் அவர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இதற்கு ராம் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இப்படத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய திரிஷா, 'பல்வேறு திரைப்பட விழாக்களில் நான் கலந்துகொண்டபோது பல சமயம் மோகன்லாலை சந்தித்திருக்கிறேன்.
அப்போது நாம் இருவரும் எப்போது இணைந்து படத்தில் நடிக்கப்போகிறோம் என கேட்பேன். இன்னும் சொல்லப்போனால் இதைத்தான் அவரிடம் அதிகம் கேட்டிருக்கிறேன். அந்த கனவு இப்போது நனவாகியிருக்கிறது. தரமான படத்தை வழங்கிய மோன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் நான் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது' என்றார். ஜீத்து ஜோசப் ஏற்கனவே கமல் நடித்த 'பாபநாசம்', கார்த்தி நடித்த 'தம்பி' படங்களை இயக்கியவர்.