அஜீத்தின், கண்ணான கண்ணே பாடல் 10 கோடி பேர் கடந்து சாதனை.. டி.இமான் இசையில் சித்  பாடிய ராராரிராரோ..

by Chandru, Dec 26, 2019, 10:07 AM IST
Share Tweet Whatsapp

அஜித்குமார் நயன்தாரா நடித்த படம் விஸ்வாசம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இப்படம் வசூலில் சாதனை செய்தது. இப்படத்தை சிவா இயக்கி இருந்தார்.  இவர்தான் தற்போது ரஜினி நடிக்கும் 168 வது படத்தை இயக்கி வருகிறார்.

விஸ்வாசம் படத்தில் தனது மகள் மீது பாசம்காட்டி அஜீத் பாடுவதுபோல் அமைக்கப்பட்ட கண்ணான கண்னே பாடல் சூப்பர் ஹிட் ஆனது. டி.இமானின் இசை அமைப்பில் சித் ஸ்ரீராம் இப்பாடலை இனிமையான குரலில் பாடி இருந்தார்.  கவிஞர்  தாமரை பாடல் எழுதியிருந்தார்.

இதன்  பாடல்  வீடியோ சென்ற ஆண்டு  டிச., 26ல் யு-டியூப்பில் வெளியிடப்பட்டது. ஒரு வருடம் நெருங்கும் இந்நிலையில்  இப்பாடல் 100மில்லியன் அதாவது 10 கோடி  பேர்களின் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

அஜித்தின் பட பாடல்  10 கோடி பார்வைகளை கடந்திருப்பதுஇதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது, இதனை  தல  ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஏற்கெனவே தனுஷ், சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் 70 கோடிபார்வையை  கடந்து புதிய சாதனை படைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Leave a reply