எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும்.
எம்ஜிஆரை துப்பாக்கியால் சுட்டதாக அவர் மீது அந்த காலத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். கடவுள் மறுப்பு பகுத்தறிவு கொள்கையை முன்னெடுத்த அவருக்கு நடிகவேல் என்ற பட்டத்தை தந்தை பெரியார் வழங்கினார். அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இதில் எம்.ஆர்.ராதாவாக சிம்பு, எம்ஜிஆர் ஆக அவ்ரவிந்த்சாமி நடிக்க உள்ளனர்.
சங்கிலி புங்கிலி கதவு தொற படத்தை இயக்கிய ஜீவ் எம்ஆர்.ராதாவின் வாழ்க்கை படத்தை இயக்க உள்ளார். இவர் எம்.ஆர்.ராதாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை மகளும், நடிகையுமான ராதிகா சரத்குமார் தயாரிக்க உள்ளராம்.