நான் ஈ நடிகருக்கு ஒன்றரை கோடி கார் பரிசு.. வீடு தேடி சென்று வழங்கிய ஹீரோ..

by Chandru, Jan 8, 2020, 21:55 PM IST

நடிகர் பிரபுதேவா இந்தியில் இயக்கிய 'தபாங் 3' படத்தில் சல்மான்கான் ஹீரோவாக நடித்திருந்தார். இதில் 'நான் ஈ' புகழ் சுதீப் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகவில்லையென்றலும் 100 கோடி வசூல் கண்டது.

நடிகர் சுதீப் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆனாலும் தபாங் 3 படத்தில் வில்லனாக நடித்தார். அதனை பாராட்டும் விதமாக ஒன்றரை கோடி விலை மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றைப் அவருக்கு சல்மான்கான் பரிசளித்தார்.

இதுபற்றி சுதீப் டிவிட்டரில் கூறும்போது, 'சல்மான்கான் என் வீடு தேடி வந்து பிஎம்டபிள்யு கார் பரிசளித்து ஆச்சர்யப்படுத்தினார். என் மீதும் என் குடும்பத்தின் மீதும் நீங்கள் காட்டும் அன்புக்கு நன்றி. உங்களுடன் பணிபுரிந்ததும், நீங்கள் வந்ததும் பெருமைக்குரிய விஷயம் நல்லது செய்தால் நல்லதே நடக்கும். அதை நம்பும் வகையில் இந்த செயல் உள்ளது' என தெரிவித்திருக்கிறார்.


More Cinema News