எனக்கு வரப்போகும் கணவர் இப்படித்தான் இருக்கணும்.. நடிகை யாஷிகா புதிய கன்டிஷன்..

by Chandru, Jan 10, 2020, 22:52 PM IST

நடிகை யாஷிகா சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். மணியார் குடும்பம், ஜாம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் யாஷிகா அடுத்ததாக, இவன்தான் உத்தமன், ராஜ பீமா படங்களில் நடித்து வருகிறார். நடிகை யாஷிகாவிடம் உங்களின் வருங்கால கணவராக எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டதற்கு சொன்ன பதில் என்ன தெரியுமா?

அவர் கூறியதாவது:
நான் எப்போதுமே சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன். சிங்கிளாக இருக்கிறேன். எனது கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு பல ஆசைகள் உண்டு. முதலில் அவர் மரியாதை தரத் தெரிந்த ஜென்டில்மேனாக இருக்க வேண்டும். என்னை அதிகமாக காதலிக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு உள்ளவராக இருப்பதுடன் அட்வென்சர் செய்வதில் ஆர்வம் கொண்டவராக இருக்க வேண்டும். முக்கியமாக, தாடி வைத்திருக்க வேண்டும் பாட்டு பாடத் தெரிய வேண்டும். லேசாக திமிரும் இருக்க வேண்டும்.
இவ்வாறு யாஷிகா தெரிவித்துள்ளார்.

யாஷிகாவின் கண்டிஷன்கள் எல்லாமே எனக்கு ஓ.கே.தான் என்று சில ரசிகர்கள் டிவிட்டரில் மணமகனுக்கான அப்ளிகேஷன் போட்டிருக்கிறார்கள்.

More Cinema News


அண்மைய செய்திகள்