ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் படம், உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.
சென்னையில் மட்டும் ரூ. 2.27 கோடி வசூல் செய்துள்ளது. அதாவது ரஜினி நடிக்க ஷங்கர் இயக்கிய 2.0 படத்தை அடுத்து தர்பார் படம் 2 கோடி வசூலித்துள்ளது. அமெரிக்காவில் ரூ. 4. 27 கோடி, ஆஸ்திரேலியாவில் ரூ. 78 லட்சம், நியூசிலாந்தில் ரூ. 7 லட்சத்து 77 ஆயிரம் வசூலித்திருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி மொழியில் ரிலீஸ் கணக்கையும் சேர்ந்தால் சுமார் 120 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கிறதாம்.
தர்பார் படத்துக்கு விமர்சனம் இருவிதமாக வந்துக்கொண்டிருப்பதால் அது வசூல் நிலவரத்தை பாதிக்கும் என்று கூறப்பட்டாலும் பொங்கல் தினத்தில் இதன் வசூல் புதிய உச்சததைை தொடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தர்பார் படத்தை திருட்டுத்தனமாக வெளியிக்கூடாது என்று கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும், தர்பார் படம் ரிலீஸான சில மணி நேரத்தில் அதை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருக்கிறது. பட வசூலை இதுவும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.