சேலையில் ரவுடி பேபி ஆட்டம் போட்ட சாய் பல்லவி.. கைதட்டி ரசித்த தனுஷ்..

by Chandru, Jan 11, 2020, 20:49 PM IST
Share Tweet Whatsapp

கோலி சோடாவே, கறி குழம்பே என்று தொடங்கும் ரவுடி பேபி பாடல் மாரி 2ம் பாகம் படத்தில் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு தனுஷும், சாய்பல்லவிவும் செம்ம குத்தாட்டம் போட்டனர். இருவரும் டைட்டி பிட்டான காஸ்டியூம் அணிந்து ஆடியிருந்தார்கள். இப்பாடல் யூ டியூபில் வைரலாகி நம்பர் ஒன் இடத்தை பிடித்தது பிரத்யேக காஸ்டியூம் அணிந்து காட்சியில் பங்கேற்றிருந்தனர். யூ டியூபில் அதிகளவில் பார்த்த பாடலாக நம்பர் ஒன் இடத்தை பிடித்தது.

இந்நிலையில் சென்னையில் நடந்த திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஒன்றிற்கு சாய் பல்லவி ஜரிகை பார்டர் வேய்ந்த கறுப்பு டிசைனர் சேலை அணிந்து வந்திருந்தார் . அவரிடம் ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடும்படி கேட்டபோது முதலில் தயங்கியவர் பின்னர் ஒரு சில நடன அசைவுகளை ஆடிக்காட்டினார். சேலை கட்டிக் கொண்டு சாய் பல்லவிஆடிய இந்த வீடியோ நெட்டில் வைராகியிருக்கிறது.

மேடையில் சாய் பல்லவி சேலை கட்டிக்கொண்டு ரவுடி பேபி பாடலுக்கு ஆடிய நடனத்தை முதல் வரிசையில் அமர்ந்திருந்த நடிகர் தனுஷ் கைதட்டி ரசித்து பார்த்தார்.


Leave a reply