விஜய்யின் மாஸ்டர் செகன்ட் லுக்.. யாருக்கு சைலண்ட் சொல்கிறார் ஹீரோ..

by Chandru, Jan 16, 2020, 16:55 PM IST
Share Tweet Whatsapp

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்துக்கு மாஸ்டர் என டைட்டில் வைக்கப்பட்டது.

பர்ஸ்ட் லுக்குடன் விஜய் போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டு ரசிகர் களிடம் வரவேற்பை பெற்றது. நேற்று மாஸ்டர் செகண்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டதால் சமூக வலைதளங்களில் 'மாஸ்டர்' என்ற வார்த்தை டிரெண்டிங்கில் இருந்தது. நேற்று மாலை செகண்ட் லுக் வெளியானது.
கருப்பு சட்டை அணிந்த மாணவர்கள் முன்புறமாக கவனித்துக்கொண்டிருக்கு அவர்களுகு்கு நடுவில் நிற்கும் விஜய் கருப்பு கண்ணாடி, கருப்பு சட்டை அணிந்து சைலண்ட் என்று சொல்வதுபோல் உதட்டின் மீது ஒற்றை விரலை வைத்தபடி இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் விஜய். இப்படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.


Leave a reply