தளபதி விஜய், மாஸ்டர் அப்டேட்..  டீஸர்கூட ரிலீஸ் ஆகல, மாஸ்டர் பிஸ்னஸ் ஓவர்..

by Chandru, Jan 22, 2020, 18:54 PM IST

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்துக்கு மாஸ்டர் என பெயரிடப்பட்டிருக்கிறது. கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகாவில் இதன் 3 கட்டபடப்பிடிப்பு நடந்துள்ளது. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முக்கிய வேடமொன்றில சாந்தனு நடிக்கிறார்.

மாஸ்டர் படத்தின் வெளிநாட்டு உரிமையை மாலீக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. (ஓவர்சீஸ் மட்டும் 34 கோடிக்கு விற்பனையானதாக டாக் உள்ளது) இந்த ஆண்டில் அதிக விலைக்கு சென்ற முதல்படம் இது. வாங்கிய 2 நாளில் இதன் பிஸ்னஸ் முடிந்துவிட்ட தாக இந்நிறுவனம் தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள மெசேஜில், 'மாஸ்டர்' படத்தின் வெளிநாட்டு உரிமையை பெற்ற 2 நாட்களில் உலகம் முழுவதும் விற்பனை செய்து விட்டோம். இத்தனைக்கும் இன்னும் இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், ஏன் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகையர் குறித்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட வெளியாகவில்லை. ஆனால் படத்தின் ஒட்டு மொத்த வியாபாரமும் முடிந்துவிட்டது' என தெரிவித்திருக்கிறார்.


Leave a reply