ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.. ஜோடி போடும் ராஷ்மிகா..

by Chandru, Feb 3, 2020, 15:56 PM IST

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்ற படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இப்படத்தையடுத்து அவர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்நிலையில்  ஹரி இயக்கும் படத்திலும் நடிககவிருப்பதாக தகவல் வெளியாகிறது.

ஹரி இயக்கத்தில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக பேட்ட படத்தையடுத்து மாஸ்டர் படத்தில் நடிக்கும் மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் ஹரி தரப்பு ராஷ்மிகா மந்தன்னாவிடம் பேச்சு நடத்துவதாக கூறப்படுகிறது.
ராஷ்மிகா மந்தன்னா ஏற்கனவே டியர் காம்ரேட் படத்தில் விஜய தேரவகொண்டா ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்கிறார்.  தெலுங்கிலும் சூர்யா படங்களுக்கு மவுசு இருக்கிறது. அதேபோல் ராஷ்மிகாவும் தெலுங்கில் ரசிகர்கள் வட்டம் இருப்பதால் சூர்யா, ராஷ்மிகா ஜோடி படத்துக்கு பொருத்தமான வசூல் ஜோடியாக இருக்கும் என்று பட குழு எண்ணுகிறதாம். ஆனால் இதுவரை பட தரப்பு கதாநாயகியாக நடிக்கப்போவது யார் என்பதை அறிவிக்கவில்லை.


Leave a reply