மாஸ்ட்டர் படத்தில் விஜய் பாடிய பாடல்.. அரசு தரும் தொல்லைகள் பற்றி மறைமுக தாக்கு..

by Chandru, Feb 15, 2020, 21:06 PM IST

தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு வித்தியாசமான பாடல் நேற்று வெளியானது. ஒரு குட்டி கதை சொல்லட்டா என்று தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியிருக்கிறார்.

சமீபத்தில் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அவர் நடித்த பிகில் படத்துக்கு சுமார் 70 கோடி சம்பளம் பெற்ற தாகவும். ஆனால் வருமானத்தை குறைத்து காட்டியதாகவும் புகார் கூறப்பட்டது. ஆனால் சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில்தான் மாஸ்டர் படத்திலிருந்து ஒரு குட்டி கதை பாடல் வெளியிடப்பட்டது. அதில் விஜய் மறைமுகமாக அரசாங்கம் தரும் தொல்லைகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். வெறுப்பு பேச்சு பேசுபவர்கள், டிசைன் டிசைனா தரப்படும் பிரச்னைகள் பற்றியும், படிப்பு பற்றியும் பல்வேறு விஷயங்களை வசனம் கலந்த பாடலாக பாடியிருந்தார். அந்த பாடல் வெளியான சிறிது நேரத்தில் பரபரப்பானது. அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின் றனர். இந்திய அளவில் பாடல் ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது.

மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். கோடையில் ரசிகர்களுக்கு விருந்தாக படம் திரைக்கு வருகிறது.


Leave a reply