ரவுடி கதையை மையமாக வைத்து உருவான படம் அட்டு'. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் ஹீரோவாக நடித்த ரிஷி ரித்விக் தற்போது போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் மரிஜுவானா. (மரிஜஷுவானா என்றால் கஞ்சாவின் விஞ்ஞான பெயராம்) இதில் ஆஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
எம்.டி.ஆனந்த் இயக்குகிறார். எம்.டி.விஜய் தயாரிக்க கார்த்திக் குரு இசை அமைக்கிறார். இப்படத்தின் இசை, டிரெய்லர், பாடல் வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. அப்போது படத்தில் இடம்பெறும் பாடல் திரையிடப்பட்டது. அதைக்கண்டு ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். ஹீரோ ரிஷி ஹீரோயின் ஆஷாவுடன் மிக நெருக்கமாக சூடேற்றும் காட்சிகளில் நடித்திருந்தார்.
குளித்தபடியும், குளத்தில் மூழ்கியபடிமாக ஆஷாவுக்கு அவர் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிக்கும் காட்சிகள்தான் இன்ப அதிர்ச்சிக்கு காரணம். ஒரு காட்சியில் அஷாவின் உதட்டை கடித்து இழுப்பதுபோலவும் காட்சி படமாக்கப்பட்டிருந்தது.
இக்காட்சியில் நடித்ததுபற்றி ரிஷி கூறும்போது,' இந்த ஒரு பாடலில் வரும் காட்சியை பார்த்து படத்தை தவறான படம் என்று நினைக்காதீர்கள். இது சமுதாய கருத்துள்ள படம். போதை பொருள் கஞ்சா இளைஞர்களின் வாழ்க்கையும் அவர்களது குடும்பத்தையும் எப்படி பாதிக்கிறது என்பதை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. கதை பிடித்திருந்ததால் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறேன்' என்றார்.
ஆஷா கூறும்போது,'சில காட்சிகளில் ரிஷி நடிக்க கூச்சப்பட்டார். நானும். டைரக்டரும் அவருக்கு தைரியம் சொல்லி நடிக்க வைத்தோம்' என்றார்.
இந்நிகழ்ச்சியில் டைரக்டர்கள் கே.பாக்யராஜ், கே.ராஜன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார மற்றும் படகுழுவினர் கலந்துகொண்டனர்.