ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. எதையும் தைரியமாக எதிர்கொண்டு நடிப்பார். அவரே இப்போது கவர்ச்சி காட்சி என்றதும் எஸ்ஸாகி விடுகிறார்.
சமீபத்தில் 2 படங்களில் நடிக்க அழைப்பு வந்தபோது ஏற்க மறுத்துவிட்டார். அதற்கு காரணம் வட சென்னை படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்ததுபோல் நடிக்க வேண்டும் என்கிறார்களாம். இந்நிலையில்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதை ஏற்று நடித்து வருகிறார்.
'நெருக்கமான காட்சிகள் போன்றில்லாமல் நல்ல ஸ்டோரரி, நல்ல கேரக்டர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு நடிக்கத் தயார்' என்றார் ஆண்ட்ரியா.