விஷால்-மிஷ்கின் திடீர் மோதல்.. துப்பறிவாளன் 2கதி என்ன?

by Chandru, Feb 24, 2020, 17:50 PM IST

மாறுபட்ட கதை அம்சங்களுடன் கூடிய படங்களை இயக்கும் மிஷ்கின் கிரைம் ஆக்‌ஷன் பாணியிலான படமாகத் துப்பறிவாளன் படத்தை இயக்கினார். விஷால் கதாநாயகனாக நடித்தார். படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் உருவாக்கப் பேச்சு வார்த்தை நடந்தது.

ஸ்கிரிப்ட் ரெடி செய்து படப்பிடிப்பிலும் மிஷ்கின், விஷால் ஈடுபட்டனர். இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தை இயக்கினார் மிஷ்கின். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் மிஷ்கினின் துப்பறிவாளன் 2ம் பாகம் மீண்டும் தொடங்கப்படாமல் இருந்தது.

சைக்கோ படம் வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை மிஷ்கின் உயர்த்தியதுடன் ஏற்கெனவே சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக ரூ 40 கோடி கேட்டதாகத் தெரிகிறது. அதனைத் தயாரிப்பாளரும் நடிகருமான விஷால் ஏற்க மறுத்துவிட்டாராம். பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாத நிலையில் அப்படத்திலிருந்து மிஷ்கினை நீக்க முடிவு செய்திருக்கும் விஷால், படம் இயக்கும் பொறுப்பைத் தானே ஏற்கவிருக்கிறாராம். அவர் இயக்குநர் பொறுப்பை ஏற்றால் விஷால் இயக்கும் முதல் படமாக இது இருக்கும்.

விஷாலைப் பொறுத்தவரை நடிகர் ஆவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன் 2படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. விஷால், பிரசன்னா கவுதமி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.


Leave a reply