சினேகாவை அசத்திய நடிகர்.. ஆஹா ஓஹோ பாராட்டு..

by Chandru, Feb 25, 2020, 21:18 PM IST

நடிகை சினேகா பாங்கான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை என்று விமர்சகர்களால் பாராட்டு பெற்றவர். சமீபத்தில் தனுஷ் உடன் பட்டாஸ் படத்தில் அடிமுறை கலை கற்ற பெண்ணாக நடித்திருந்த கதாபாத்திரம் பாராட்டுகளை அள்ளித்தந்தது.

அப்படிப்பட்ட சினேகாவை ஒரு நடிகர் தனது நடிப்பால் அசத்திட்டாராம். அவ்வளவு பெரிய அப்பா டக்கர் யாருப்பா என்று கேட்க வேண்டாம். அதற்கு சினேகா சைலன்ட்டா பதில் அளித்திருக்கிறார். தனது கணவர் பிரசன்னாதான் தனது நடிப்பால் தன்னை அசர வைத்துவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார். இதுபற்றி அவர் தனது இணைய தள பக்கத்தில் பிரசன்னாவை டன் டன்னாக ஐஸ்வைத்து புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படத்தில் அருண் விஜய்யுடன் பிரசன்னா நடித்துள்ளார். இப்படத்தில் பிரசன்னாவின் நடிப்பைத்தான் பாராட்டி உள்ளார் சினேகா. 'மச்சான் எப்போதும் உன்னுடைய நடிப்பை நினைத்து பெருமை அடைவேன். இம்முறை திவாகர் குமரன் கதாபாத்திரம் முத்திரையாக அமைந்திருக்கிறது. ஸ்டைலாகவும், கச்சிதமாகவும், நேர்மையாகவும் உள்ளது. நீ எந்த பாத்திரம் ஏற்றாலும் நன்றாகச் செய்வாய். ஆனால் குறிப்பாக மாபியாவில் ஏற்ற கதாபாத்திரம் மிகவும் நேர்த்தி, மிக மிகச் சந்தோஷமாக இருக்கிறேன். ரசிகர்களும், மக்களும் உன்னுடைய நடிப்பைப் பாராட்டியிருக்கிறார் கள். உங்களுடைய பாராட்டுக்கும். ஆதரவுக்கும் நன்றி. இந்த பாராட்டும், ஆதரவும் உன்னைக் கொண்டு செல்ல வேண்டிய உயரத்துக்கு கொண்டு செல்லும்' என தெரிவித்திருக்கிறார் சினேகா.

சினோவுக்கு நன்றி தெரிவித்திருக்கும் பிரசன்னா,'தேங்க் யூ டா கண்ணம்மா.. கண்டிப்பாக நீ (சினேகா) இல்லாமல் நானில்லை. உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் சிறந்த நடிப்பை ஒருபோதும் என்னால் தந்தவிட முடியாது'என பதில் அளித்திருக்கிறார்.


Leave a reply