ஜெயலலிதா வேடம் கங்கனாவுக்கு நடிகர் சவால்.. என்னதான் முயன்றாலும் அம்மா ஆக முடியாது..

by Chandru, Feb 25, 2020, 21:32 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையைத் தலைவி பெயரில் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

ஜெயலலிதா தோற்றத்தைக் கொண்டு வருவதற்காகத் தொடக்கம் முதலே பாடாத பாடுபட்டு வருகிறார். இதற்காக வெளிநாடு சென்று மேக்அப் அணிவிக்கப்பட்டது. ஆனாலும் அதில் ஜெயலலிதாவின் சாயல் இருந்ததே தவிர அச்சு அசப்பில் அவரை கொண்டு வரமுடியவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று ஜெயலலிதாபோன்று மேக் அப் அணிந்த கங்கனாவின் புதிய படம் வெளியிடப்பட்டது. ஒரு சிலர் பாராட்டியிருந்தாலும் பலர் அச்சு அசப்பில் ஜெயலலிதா தோற்றம் எதுவும் தென்படவில்லை என்று கமென்ட் பகிர்ந்தனர்.

தற்போது கங்கனாவின் தோற்றத்தைக் குறிப்பிட்டு நடிகர் ஒருவர் தடாலடியாக மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்திருப்பதுடன் தாரை தப்பட்டை, மருது, தர்மதுரை, இப்படை வெல்லும், ஸ்கெட்ச் போன்ற பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளவர் ஆர்.கே.சுரேஷ். அடுத்து பாலா இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு வெளிடப்பட்ட தலைவி படத்தின் கங்கனா ரனாவத்தின் ஜெயலலிதா தோற்ற படத்தைக் குறிப்பிட்டு.' என்னதான் முக அமைப்புகள் காட்டினாலும் அம்மா அவர்களின் தெய்வீக முகம் யாராலும் ஈடு செய்ய வாய்ப்பே இல்லை என தெரிவித்திருக்கிறார் ஆர். கே.சுரேஷ். அவரது கமென்டுக்கு பலரும் உண்மைதான் என ஆதரவாகக் கருத்து பதிவு செய்துள்ளனர்.


Leave a reply