விஜய்க்கான கதையில் சிம்பு நடிக்கிறார்.. ஒரே இரவில் தலைகீழ் மாற்றம்..

by Chandru, Mar 5, 2020, 15:35 PM IST

நடிகர் சிம்பு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருவதுடன் ஹன்சிகா மோத்வானியுடன் மஹா படத்தில் சமீபத்தில் நடித்து முடித்தார். இந்நிலையில் அதிர்ச்சியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தையடுத்து விஜய் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. பாண்டிராஜ், சுதா கொங்கரா, ஷங்கர் பெயர்கள் அடிபட்டு வந்தன. இதில் சுதா கொங்கரா முக்கியமாகப் பேசப்பட்டார். சமீபத்தில் விஜய்யிடம் அவர் கதை சொன்னாராம். அதைக் கேட்டு சில திருத்தங்களை விஜய் செய்யக் கேட்டார். அதைச் சுதா ஏற்க மறுத்ததாகக் கூறப் படுகிறது. இதையடுத்து அப்படத்தில் விஜய் நடிப்பது கேள்வி குறியாகிவிட்டது. மீண்டும் விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலேயே நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் அட்லியும் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு வருகிறார்.
விஜய்யிடம் கைநழுவிய படம் தற்போது சிம்புக்கு சென்றிருக்கிறது. சிம்பு, சுதா இருவரும் நண்பர்கள். கதையைச் சொன்ன மாத்திரத்தில் சிம்புக்குப் பிடித்துவிட அவர் நடிக்க ஓ.கே சொல்லியிருக்கிறாராம். விஜய் படக் கதையில் ஒரே பாய்ச்சலாகச் சிம்பு எகிறியிருப்பது அவரது இமேஜை உயர்த்தியிருக்கிறது.


சுகா கொங்கரா ஏற்கனவே மாதவன், ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தை இயக்கியவர். தற்போது சூர்யா நடிக்கும் சூரரரைப்போற்று படத்தை இயக்கி உள்ளார் விரைவில் அப்படம் திரைக்கு வரவிருக்கிறது.


Leave a reply