காவலன் படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்ததுடன் ஆண்டாள் அழகர், குடியரசு, சாமிடா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நீபா. சமீபத்தில் இவர் டிவி நிகழ்ச்சியில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டார். குறிப்பிட்ட தூரத்தைக் குறைந்த நொடிகளில் கடக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
நீச்சல் குளத்தில் குதித்து நீந்த தொடங்கிய சில நிமிடங்களில் நீபா சோர்வடைந்தார். நிலை தடுமாறி தண்ணீரில் மூர்ச்சையானார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் உடனடி யாக அவரை தண்ணீரிலிருந்து மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு டாக்டர்கள் உடனடி சிகிச்சை அளித்ததில் ஆபத்திலிருந்து மீண்டார்.