குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் என ஏற்கனவே 3 முறை ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்திருக்கும் டேனியல் கிரெய்க் கடைசியாக ஜேம்ஸ் பாண்ட் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் நோ டைம் டு டை. இப்படம் ஏப்ரல் மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியிருப்பதுடன் ஆயிரக் கணக்கானவர்கள் வெவ்வேறு நாடுகளில் பலியாகி வருகின்றனர். அதற்கான மருந்து கண்டு பிடிக்க முடியாத நிலையில் பாதிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
கொரானா பாதிப்பால் இத்தாலி, தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன. இந்த இடங்களில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் மார்க்கெட் மட்டுமே 200 மில்லியன் டாலர் அதாவது 1481 கோடியாகும். எனவே இவ்வளவு இழப்பை தவற விடுவதற்குவைத் ஜேம்ஸ் பாண்ட் பட நிறுவனம் தயாராக இல்லை. எனவே ஏப்ரல் மாதம் வரவிருந்த நோ டைம் டு டை படத்தை வரும் நவம்பர் மாதத்திற்கு ரிலீஸை தள்ளி வைத்திருக்கின்றனர்.