மாநாடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த ஆண்டில் நல்ல தொடக்கமாக சிம்புவுக்கு மாநாடு அமைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
சில நாட்களுக்கு முன் விஜய்க்குச் சொல்லப்பட்ட கதை ஒன்று சிம்புவை தேடி வந்ததாகத் தகவல் வந்தது. அதாவது சூர்யா நடிக்கும் சூரரைப்போற்று படத்தை இயக்கும் சுதா கொங்கரா அடுத்து விஜய் படத்தை இயக்குவதற்காக அவரிடம் கதை சொல்ல அதைக்கேட்ட விஜய் சில திருத்தங்களைச் சொல்லியிருக்கிறார். திருத்தம் செய்யமாட்டேன் என்று கூறிய சுதா பிறகு அந்த கதையை சிம்புவிடம் சொல்லி கால்ஷீட் பெற்று விட்டாராம்.
இந்நிலையில் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிக்காக ஒரு கதைரெடி செய்து அதை அவரிடம் சொல்லியிருக்கிறார், இப்படத்தைத்தான் கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடக்க விழா நடக்கும் என்றும் கூறப் பட்டு வந்தது. ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாக வில்லை. இந்நிலையில் ரஜினிக்காகத் தயார் செய்திருக்கும் கதையை சிம்புவிடம் சொல்லியிருக்கிறாராம். அதில் நடிக்க சிம்புவும் நடிக்க ஒப்புக் கொண்டாராம். படத்தைக் கமல் தயாரிக்கிறார் என்றும் கூறப் படுகிறது. ஆனால் மார்ச் மாதத்தில் கமல் தயாரிக்க ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் தொடக்க விழா நடக்கும் என்றும் ஒரு தரப்பு சொல்கிறது.