சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி விட்டது. இதையடுத்து கொரோனா விழிப்புணர்வு பிரசாரம் வேகப்படுத்தப்பட்டிருக்கிறது.
கடந்த சில தினங்களாக செல்போனிலிருந்து யாருக்காவது தொடர்பு கொண்டால் முதல் குரலாக யாரோ ஒருவரின் இருமல் சத்தம் கேட்கிறது. அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு டிப்ஸ் தருகின்றனர்.
ஒவ்வொருமுறை செல்போனில் தொடர்பு கொள்ளும்போதும் இப்படியொரு இருமல் கேட்கும் போது பலர் எரிச்சல் அடைந்திருக்கின்றனர். நடிகர் மாதவனுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அவர் தனது டிவிட்டரில், 'யாருக்காவது போன் செய்யும் போது நமக்கு முதலில் இருமல் சப்தம் கேட்பது அதிர்ச்சியாக உள்ளது. விழிப்புணர்வு பிரசாரம் சிறப்பான பணிதான். ஆனால் இருமல் சப்தத்தை நீக்குங்கள். போனில் அழைக்கும் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்' எனu குறிப்பிட்டிருக்கிறார்.