நடிகை நந்திதா சுவேதா சமீபமாக போலீஸ் அதிகாரி உள்ளிட்ட வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கிறார். அடிக்கடி தனது இணையதள பக்கத்தில் கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் ஆங்கில பாடல் ஒன்றை டப்மாஷ் செய்து பகிர்ந்திருக்கிறார். மேற்கத்தியப் பாடகிபோல் அவர் அணிந்திருக்கும் டைட்டான டாப்சும், இடுப்பை வளைத்து ஆடும் ஆட்டமும் கவனிக்க வைக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். அடுத்து ஹாலிவுட் படத்துக்கு முயற்சிக்கிறாரா என்று ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்குமுன் நிறையத் தமிழ்ப் படப் பாடல்களுக்கு நந்திதா டப்மேஷ் செய்து வெளியிட்டிருக்கிறார்.