கர்நாடக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இயக்குனர் யார் தெரியுமா ?

Mar 1, 2018, 21:13 PM IST

கர்நாடக அரசு இயக்குனர் மணிரத்னமிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

கர்நாடக அரசு மற்றும் பெங்களூரு இண்டர்னேஷனல் பிலிம் பெஸ்டிவல் இணைந்து விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு முதல் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த முதல் வாழ்நாள் சாதனையாளர் விருது இயக்குனர் மணிரத்னமிற்கு வழங்க அறிவிக்கப்பட்டது.

இந்த விழா இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர் மணிரத்னமிற்கு ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும், நினைவுப் பரிசும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதனை, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இந்தப் பரிசை வழங்கினார்.

You'r reading கர்நாடக அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இயக்குனர் யார் தெரியுமா ? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை