பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. இதில் பரமபதம் விளையாட்டு படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக நடித்து வந்தார் திரிஷா. கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடி யாக நடித்தார். அதன்பிறகு அவர் சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடிக்கவில்லை. நீண்ட இடை வெளிக்குப் பிறகு சிரஞ்சீவி புதிதாக நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவுக்கு வாய்ப்பு வந்தது. உடனே ஒப்புக்கொண்ட திரிஷா ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் படக் குழுவினருடன் திரிஷாக்கு பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து சிரஞ்சீவி படத்திலிருந்து விலகுவதாக அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார் திரிஷா.
இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கப்பட்டு மெசேஜ் பகிர்ந்த திரிஷா, ' தொடக்கத்தில் ஒன்றைக் கூறுகிறார்கள். பிறகு அப்படியே மாறிவிடுகிறார்கள். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது. இந்த போக்கு படக் குழுவினருடன் எனக்குக் கருத்து வேறுபாட்டையும், வருத்தத் தையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே சிரஞ்சீவி சார் படத்திலிருந்து விலகுகிறேன். பட டீமிற்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் மற்றொரு பிரமாண்ட படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர் களை சந்திக்கிறேன்' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.