மாஸ்டர்படத்தில் விஜய்க்கு 200 காஸ்ட்யூம் மாற்றம்.. புது அனுபவம் பகிர்ந்த இயக்குநர்..

by Chandru, Mar 16, 2020, 19:47 PM IST

மாஸ்டர் ஆடியோ ரிலீஸ் விழா வில் பேசிய அப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'விஜய் சார் நடித்திருக்கும் மாஸ்டர் படத்துக்கு முதலில் வாத்தி என்று பெயர் வைக்க எண்ணியிருந்தோம் பின்னர் மாஸ்டர் என வைக்கப்பட்டது.

இப்படத்தில் நடிக்கக் கேட்கச் சென்றபோது விஜய் சேதுபதி கதையே கேட்க வில்லை. உன் மேல் இருக்கும் நம்பிக்கையில் நடிக்கிறேன் என்றார்.

இப்படத்தில் விஜய்யை வித்தியாசமான விதத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கதையும் வித்தியாசமான கோணத்தில் சொல்லப் பட்டுள்ளது. என் படத்தில் ஹீரோ வுக்கு ஒன்று அல்லது இரண்டு காஸ்டியூம் தான் இருக்கும். இப்படத்தில் விஜய்க்கு 200 காஸ்ட்யூம் பயன் படுத்தப்பட்டுள்ளது. இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.


Leave a reply