97 வயது நடிகரைத் தனிமைப்படுத்திய நடிகை.. கொரோனா வைரஸ் தொற்று பயம்..

by Chandru, Mar 17, 2020, 18:31 PM IST

1940கள் தொடக்கத்திலிருந்தே இந்தியில் சோக நடிப்பை வெளிப்படுத்துவதில் புகழ் பெற்றவர் திலீப் குமார். இவருக்கு 97 வயது ஆகிறது. அடிக்கடி மூச்சுத் திணறல் காரண மாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்.

சிகிச்சைக்குப் பிறகு குணமாகிச் சென்ற மாதம் வீடு திரும்பினார். அவரை கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறார் மனைவியும் பழம்பெரும் நடிகையுமான சைரா பானு. ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு குணமாகி ஓய்வு எடுத்து வரும் திலீப்குமாருக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் சைரா இதுகுறித்து டாக்டர்களிடம் ஆலோசனை செய்தார். இதையடுத்து திலீப்குமாரை யாரும் சந்திக்காத வகையில் தனி அறையில் பாதுகாப்பாகத் தங்க வைத்திருக்கிறார்.

திலீப்குமார் டிவிட்டரில் வெளியிட்ட மெசேஜில்,'கொரேனோ வைரஸ் தொற்று காரணமாக நான் தனிமைபடுத்தப்பட்டிருக்கிறேன். சைரா எந்த விதத்திலும் தொற்றுக்கான வாய்ப்பை தரவில்லை. எனக்குத் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். ரசிகர்களும் பாதுகாப்பாக இருங்கள். வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் தங்கிப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.


Leave a reply